இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கம்பஹா, அம்பாறை, குருநாகல், திருகோணமலை மற்றும் களுத்துறை ஆகிய 5 மாவட்டங்களின் 14 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அதன் முழுமையான விபரம்
கம்பஹா
- திவுலப்பிட்டி பொலிஸ் அதிகாரப் பிரிவில் அஸ்வென்னவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவு
- கொட்டதெனியாவ பொலிஸ் அதிகாரப் பிரிவில், ஹீரலு கெதர முதலான கிராம சேவகர் பிரிவு
அம்பாறை
- தெய்யத்தகண்டி பொலிஸ் அதிகாரப் பிரிவில் கதிராபுரம் கிராம சேவகர் பிரிவு
- தெய்யத்தகண்டி கிராம சேவகர் பிரிவு சந்தன பகுதி, தெய்யத்தகண்டி கிராம சேவகர் பிரிவு மற்றும் தொலகந்த பிரிவு
குருநாகல்
- குமுபுகடே பொலிஸ் அதிகார பிரிவில், தித்தவெல்கல மற்றும் நீராவிய முதலான கிராம சேவகர் பிரிவு
திருகோணமலை
- உப்புவெளி பொலிஸ் அதிகார பிரிவில் அன்புவழிபுரம் கிராம சேவகர் பிரிவு
- திருகோணமலை பொலிஸ் அதிகார பிரிவில், உவர்மலை, மட்கோ, லிங்கநகர் முதலான கிராம சேவகர் பிரிவு
- சீனக்குடா பொலிஸ் அதிகார பிரிவு
- சீனக்குடா கிராம சேவகர் பிரிவு லங்காபாலம் மற்றும் தன்யாகம-01,
- காவட்டிகுடா கிராம சேவகர் பிரிவு சமன்புர, மீன்பிடி கிராமம் மற்றும் தன்யாகம-02
களுத்துறை
- பாணந்துறை தெற்கு பொலிஸ் அதிகாரப் பிரிவில் நாரம்பிட்டி கிராம சேவகர் பிரிவு