கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 30இலட்சத்து இரண்டாயிரத்து 758பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 12ஆவது நாடாக விளங்கும் கொலம்பியாவில் இதுவரை 77ஆயிரத்து 854பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 17ஆயிரத்து 222பேர் பாதிக்கப்பட்டதோடு 495பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து ஐந்தாயிரத்து 30பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆறாயிரத்து 6பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து 28இலட்சத்து 19ஆயிரத்து 874பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.