செர்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, செர்பியாவில் ஏழு இலட்சத்து 408பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 35ஆவது நாடாக விளங்கும் செர்பியாவில், இதுவரை ஆறாயிரத்து 558பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 834பேர் பாதிக்கப்பட்டதோடு 19பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 32ஆயிரத்து 452பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 137பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஆறு இலட்சத்து 61ஆயிரத்து 398பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.