ஸிம்பாப்வே நாட்டில் பாகிஸ்தான் அணி வீரர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றனர். தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹராரே நகரில் நடந்து வருகிறது. அதில், இரண்டாவது நாளில் பாகிஸ்தான் வீரர் அபித் அலி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் முதன்முறையாக இரட்டைச் சதம் (215 ஓட்டங்கள்) அடித்த அவர், ஸிம்பாப்வே நாட்டில் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டங்களைச் சேர்த்த பாகிஸ்தானிய வீரர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டனான யூனிஸ் கான், ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களை எடுத்ததே இதுவரையான சாதனையாக இருந்தது. கடந்த 1998 ஆம் ஆண்டு மொஹமட் வசிம் ஹராரேவில் எடுத்த 192 ஓட்டங்கள் என்ற சாதனையை யூனிஸ் கான் முறியடித்திருக்க, அதனை 8 ஆண்டுகள் கழித்து அபித் அலி தன் வசப்படுத்தியுள்ளார்.