ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இளம் கிரிக்கெட் வீரர் சேதன் சக்காரியாவின் தந்தை கொரோனா பாதிப்பால் நேற்று காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சேதன் சக்காரியாவின் தந்தை கொரோனா பாதிப்புக்குள்ளாகி, குஜராத்தின் பாவ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு ஏற்கனவே நீரிழிவு பாதிப்பு உள்ள நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். நேற்று அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எளிமையான குடும்பத்திலிருந்து வந்த சேத்தன் சக்காரியா, இந்த ஆண்டு நடந்த சையட் முஷ்டாக் அலி ரி-20 தொடரில், 5 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். இந்த திறமை வெளிப்பாடு காரணமாக 1.2 கோடி ரூபா கொடுத்து அவரை ராஜஸ்தான் ரோயல்ஸ் வாங்கியிருந்தது. ‘ஐ.பி.எல். மூலம் கிடைத்த வருமானத்தால்தான் தந்தைக்கு சிகிச்சையளிக்க முடிந்தது. கிரிக்கெட் ஊதியமே எங்களது குடும்பத்தின் வாழ்வாதாரம்’ என கூறியிருந்தார் சக்காரியா.