கொரோனா பாதிப்பு நிவாரண நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
முதலமைச்சராக பதவியேற்றப்பின் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இதன்படி கொரோனா பாதிப்பு நிவாரண உதவிதொகை முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இந்த திட்டம் இன்று நண்பகல் அளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.