16 ஆண்டுகளுக்கு பின் பொலிவியா மற்றும் சிலிக்கு இடையில் ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையில் சுமார் 616 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டு சோதனை ரயில் ஒட்டம் நடந்தது.
பொலியாவில் இருந்து கிளம்பிய 16 பெட்டிகள் கொண்ட ரயில் 410 டன் எடை கொண்ட இரும்பு காயில்களை சிலி நாட்டிற்கு கொண்டு சென்றது.
முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றி அடைந்த நிலையில் அடுத்தக்கட்டமாக சிலியில் இருந்து 400 டன் சோயாபீன்கள் ஏற்றிச் செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர் காரணமாக சிலி மற்றும் பொலிவியா நாடுகளுக்கு இடையிலான ரயில் சேவை கடந்த 2003ஆம் ஆண்டு துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.