தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ருவிற்றரில் தெரிவித்துள்ள மத்திய அரசு அலுவலகம், இவ்வாறு கொரோனா தொற்று ஏற்படுபவர்களுக்கு லேசான அறிகுறிகளே ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
உடலுக்குள் கொரோனா வைரஸ் நுழைந்தாலும், அது பல்கிப் பெருகி பாதிப்பு ஏற்படுத்துவதை தடுப்பூசி தடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
அதேநேரம் தடுப்பூசி எடுத்துகொண்டாலும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.