கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்ட பலர் கொரோனா வைரஸ் காவிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வருகின்றது. இதற்கு பலரின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது.
அந்தவையில் கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்ட போதும் முறையான தனிமைப்படுத்தல் விதிமுறைகளை அவர்கள் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது.
அத்துடன் குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட பலர் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டதாகவும், முகக்கவசம் இன்றி செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்தே இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் வேகம் அதிகரித்து செல்வதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேநேரம் பெருமளவான மதநிகழ்வுகளில் பங்குபற்றியவர்களும் கொரோனா வைரஸ் காவிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.