வடக்கு அயர்லாந்தில் அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியுடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி வரை தடுப்பூசி வழங்கப்பட்ட மொத்தம் 550,000 பேரிடமிருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த எண்ணிக்கை பிரித்தானியாவில் (198) உட்பட இங்கிலாந்தில் இருந்து சந்தேகிக்கப்படும் பிற தொற்று வீதத்தில் உள்ளது. ஸ்கொட்லாந்து (18) வேல்ஸ் (9) மற்றும் தெரியாத (12) இதில் அடங்கும்.
இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்கனவே பிரித்தானியாவிலும் உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது.
ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா முதல் அளவைத் தொடர்ந்து ஏற்படும் மோசமான எதிர்வினைகள் மிகவும் அரிதானவை.
எம்.எச்.ஆர்.ஏ (மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம்) பெரும்பான்மையான மக்களுக்கு, கடுமையான நோய் மற்றும் மரணத்தைத் தடுப்பதன் நன்மைகள் எந்தவொரு ஆபத்துகளையும் விட அதிகமாக இருப்பதை வலியுறுத்துகின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.