விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் கொவிட் குழுவின் முடிவுக்கு ஏற்ப தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்தார்.
இலங்கையில் கொவிட் பரவியிருந்தாலும, சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களின்படி இலங்கைத் தொழிலாளர்களை திருப்பி அனுப்புவது தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் அரசாங்க தனிமைப்படுத்தப்பட்ட மையங்களைப் போலவே தொடரும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து விமான நிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் ரணதுங்க கூறினார்.
இலங்கைத் தொழிலாளர்களிடையே கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அவர்களிடமிருந்து இதுவரை எந்தக் கொத்தணிகளும் உருவாகவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.