இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 406 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 37 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 97 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் 37 இலட்சத்து 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறனர். இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நேற்றும் மரணங்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை கடந்துள்ளது. 4 ஆயிரத்து 126 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 58 ஆயிரத்தை கடந்துள்ளது.