கொரோனா தொற்று அதிகமாக பரவிவரும் மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் ஏறக்குறைய 10 வீதமான மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாகவுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்கவா கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக அமுலில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தொற்று பாதிப்பு சதவிகிதத்தை பாதியாக குறைத்தால் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் எனக் குறிப்பிட்ட அவர் டெல்லியில் 35 சதவீதமாக இருந்த தொற்று பாதிப்பு 17 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் இந்த பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தினால் அது பேரழிவாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.