பாலஸ்தீனிய போராளிகள் ஐந்தாவது நாளில் இஸ்ரேலுக்குள் ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்திவருகின்ற நிலையில், இஸ்ரேலிய இராணுவம் காசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) தாக்குதல்களில் விமான மற்றும் தரைப்படைகள் ஈடுபட்டிருந்தாலும் காசாவிற்குள் நுழையவில்லை என இஸ்ரேலின் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய பீரங்கிகள், துப்பாக்கிப் படகுகள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் காசாவில் பலத்த பொருட் மற்றும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை சண்டை தொடங்கியதில் இருந்து காசாவில் 100க்கும் மேற்பட்டோர் மற்றும் இஸ்ரேலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், யூத மற்றும் இஸ்ரேலிய- அரபு கும்பல்கள் இஸ்ரேலுக்குள் போராடி வருகின்றன. இந்த உள்நாட்டு அமைதியின்மையை அடக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ் பாதுகாப்புப் படையினரை வலுப்படுத்த உத்தரவிட்டார்.
அத்துடன் இந்த உள்நாட்டு அமைதியின்மையின் போது, 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.