கொரோனா தொற்றை எதிர்கொள்ள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி வழங்கியுள்ளனர்.
அந்தவகையில் நடிகர் அஜித் தற்போது 25 இலட்சம் ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கியுள்ளார்.
முதலில் 2.5 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில், நடிகர் அஜித் 25 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளதாக அவரின் செய்தி தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.
இதேநேரம் நடிகர் சிவக்குமார், தனது குடும்பத்தினர் சார்பாக 1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். அதேபோல் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தமிழக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் 25 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.