இங்கிலாந்தில் அதிகமான கடுமையான நெருக்கடிக்குள் வாழும் வீடற்றவர்களுக்கு உதவுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 203 மில்லியன் பவுண்டுகள் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த இலையுதிர்காலத்தில் இங்கிலாந்தில் எந்த ஒரு இரவிலும் சுமார் 2,688பேர் சுமாராக வீதிகள் தூங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து வீடமைப்பு செயலாளர் ரொபர்ட் ஜென்ரிக் கூறுகையில், ‘தங்குமிடம் மற்றும் சிறப்பு மனநலம் அல்லது அடிமையாதல் சேவைகளை ஆதரிப்பதற்காக உள்ளூர் சபைகளுக்கு பணம் வழங்கப்படும்.
புதிய முதலீட்டின் மூலம் 14,500 படுக்கைகள் மற்றும் 2,700 உதவி ஊழியர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்’ என கூறினார்.
கடந்த ஆண்டு இந்த முயற்சிக்கு ஒதுக்கப்பட்ட 112 மில்லியன் பவுண்டுகளிலிருந்து இந்த நிதி 81 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அரசாங்கம் கூறியுள்ளது.