பிரான்ஸின் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் மேலும் நான்கு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, பஹ்ரைன், கொலம்பியா, கோஸ்டா ரிகா, உருகுவே ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் இருந்து மேலும் குறித்த இந்த நான்கு நாடுகள் இந்த பட்டியலில் இணைகின்றன.
இந்த நாடுகளில் இருந்து பிரான்சுக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் திகதியில் இருந்து, இந்தியா, பிரேஸில், சிலி, தென்னாபிரிக்கா, போன்ற நாடுகளை இணைத்திருந்த பிரான்ஸ், கடந்த மே 8ஆம் திகதி முதல், இலங்கை, கட்டார், துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளையும் இந்த பட்டியலில் இணைத்திருந்தது.