கிளிநொச்சி- தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு, விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பாக மேலதிக தீர்மானம் நாளை (செவ்வாய்க்கிழமை) எடுக்கப்படலாம் எனவும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் முடிவுகளின் அடிப்படையில் 8பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது இவர்களில் 7ம் யூனிற் பகுதியில் 7 பேருக்கும் 5ம் யூனிற் பகுதியில் ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்தே உடன் அமுலுக்கு வரும் வகையில் தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு, சுகாதார தரப்பினர் மற்றும் இராணுவம் ஆகியோரின் விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் இவ்விடயம் தொடர்பாக மேலதிக தீர்மானங்கள் நாளை மேற்கொள்ளப்படுமென மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.