போர்த்துகலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக, எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போர்த்துகலில் கொவிட்-19 தொற்றிலிருந்து எட்டு இலட்சத்து இரண்டாயிரத்து 900பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 30ஆவது நாடாக விளங்கும் போர்த்துகலில் இதுவரை எட்டு இலட்சத்து 42ஆயிரத்து 182பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், 17ஆயிரத்து 7பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 334பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 22ஆயிரத்து 275பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 71பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.