காஸாவில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அழைப்பு விடுத்துள்ளார்.
அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்க இஸ்ரேலை ஜனாதிபதி ஜோ பைடன், கேட்டு கொண்டுள்ளார்.
மேலும், எகிப்து மற்றும் பிற நட்பு நாடுகளுடன் அமெரிக்காவின் பங்களிப்பு குறித்தும் விவாதித்து உள்ளார்.
அதே சமயம் இஸ்ரேலுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்ய ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதங்களுக்கும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது.
மொத்தம் 735 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.