பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் மீண்டும் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் இராணுவத்திற்கும், பலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் கடந்த சில தினங்களாக கடும் மோதல் இடம்பெற்று வருகின்றது.
இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் தாக்குதலில் பலஸ்தீனத்தில் 63 குழந்தைகள் உள்ளடங்களாக சுமார் 217 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் போரை நிறுத்துமாறு கூறியும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று(செவ்வாய்கிழமை) இரவு முழுவதும் விடிய விடிய இஸ்ரேலிய விமானங்களும், தரைப்படையினரும் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.