வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயல், அதிதீவிர புயலாக மாற்றமடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே இவ்விடயத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஆலோசனை கூட்டமொன்றினை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தவுள்ளார்.
குறித்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















