இங்கிலாந்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மாட் ஹான்கொக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா முழுவதும் இதுவரை 60 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்தவகையில் 37,726,924 பேருக்கு முதலாவது தடுப்பூசியும் 22,071,497 பேருக்கு இரண்டு முறை கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள மாட் ஹான்கொக், “இன்று இங்கிலாந்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
எங்கள் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான தேசிய முயற்சிகளில் ஒன்று. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.