ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) இன், இன்னும் அறிவிக்கப்படாத வங்கிக் கணக்குகள் வெளிவந்துள்ளன.
வெளிநாட்டு நிதி வழக்கில், மனுதாரர் அக்பர் எஸ்.பாபர் பரிந்துரைத்த இரண்டு நிதி ஆய்வாளர்களால் பி.டி.ஐ கணக்குகளை ஆய்வு செய்ய பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. குறித்த ஆய்விலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இரகசிய பி.டி.ஐ கணக்குகள் வெளிச்சத்துக்கு வந்ததால், கட்சியின் மீது அதிருப்தி அடைந்த உறுப்பினரான மனுதாரர், ஈ.சி.பி ஆய்வுக் குழுவால் இரகசியமாக வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி ஊடாக கோரப்பட்ட அனைத்து அசல் கணக்குகளையும் பரிசீலிக்கக் கோரினார்.
இந்நிலையில் அசல் பி.டி.ஐ வங்கி அறிக்கைகளை ஆய்வு செய்யக் கோரும் மனுதாரரின் சமீபத்திய விண்ணப்பம் குறித்து ஈ.சி.பி இன்னும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.
இந்த விடயம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மனுதாரர், அசல் பி.டி.ஐ வங்கி அறிக்கைகளை ஆய்வு செய்ய அனுமதிக்க மறுத்த ஈ.சி.பி ஆய்வுக் குழுவின் தர்க்கத்தை மீண்டும் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் பி.டி.ஐ கணக்குகள் தொடர்பாக வெளிப்படையான விசாரணைக்கு தடைகளை உருவாக்குபவர்கள், பாகிஸ்தானின் அரசியல் ஒரே இரவில் மாறக்கூடும் என்பதை முதலில் உணர வேண்டும்.
ஏனெனில் இந்த சம்பவத்தில் நாளை பலர் ஒப்புதல்தாரர்களாக மாறுவதற்கு கூரிய வாய்ப்பு அதிகம் உள்ளது.
இம்ரான் கான் ஒரு காலத்தில் நடுநிலை நடுவர்களின் சாம்பியனாக இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வெளிநாட்டு நிதியளிப்பு வழக்கில், ஆவணப்படுத்தப்பட்ட தாமதமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி, போட்டியை சரிசெய்ய அவர் தனது சக்தியால் முடிந்த அனைத்தையும் செய்தார்.
அதாவது எந்தவொரு கொள்ளையிலும் கொள்ளையர்கள் எப்போதுமே ஆதாரங்களை விட்டுச்செல்கிறார்கள்.மேலும் புலனாய்வாளர்கள் நம்பகமான முடிவை வழங்குவார்கள் என நம்புகின்றேன்.
குறித்த வழக்கைத் தீர்மானிப்பதற்கு முன்னர் அனைத்து உண்மைகளும் அதற்கு முன்னால் இருப்பதை ஈ.சி.பி உறுதி செய்யும் என எதிர்பார்க்கின்றேன்.
ஏனெனில் குற்றச்சாட்டுக்குரிய உண்மைகள் அதிலிருந்து மறைக்கப்பட்டால் வெளியாகும் வரை நம்பகமான முடிவுக்கு வர முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.