அம்பாறையில் ஒருவருக்கு கறுப்பு பூஞ்சை ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும் இலங்கையில் எவருக்கும் கருப்பு பூஞ்சை நோய் இல்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த நபர் காசநோய் நோயாளி என்றும் அவர் சரியான சிகிச்சையை பெற்றுக் கொள்ளாதமையால் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்றும் ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார்.
அம்பாறையில் ஒருவருக்கு கறுப்பு பூஞ்சை நோய் உள்ளமை கண்டறியப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தது
கறுப்பு பூஞ்சை என்றும் அழைக்கப்படும் மியூகோமிகோசிஸ் என்ற அரிய மற்றும் ஆபத்தான தொற்று இப்போது இந்தியா முழுவதும் பரவி வருகிறது.
கடந்த சில வாரங்களில், இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான கறுப்பு பூஞ்சை நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
இவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறைந்தது 90 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.