இலங்கையில் மேலும் 32 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மாத்தளை (2), நாரங்கொட, நீர்கொழும்பு, கொட்டுகொட, ஹசலக்க, காலி, பதுளை, பானந்துர(2), கல்எலிய, அலவ்வ, களுத்துறை, போஹம்புர, பொலன்னறுவை, இமதூவ, மாவனெல்ல(2), காத்தான்குடி, கட்டுகித்துல, எந்தேரமுல்ல, ஹாவாஎலிய, ஹட்டன், பன்னிப்பிட்டிய, மஹரகம(2), கந்தான, மினுவங்கொட, ருவன்வெல்ல, கலவான, மத்துகம, மற்றும் நுகேகொட ஆகிய பகுதிகளிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 201 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து 959 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரையில் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 607 பேர் குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 34 ஆயிரத்து 384 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.