கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பெங்களூரில் இன்று (திங்கட்கிழமை) முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடை உத்தரவு எதிர்வரும் 7 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக காலை 6 மணியில் இருந்து 10 மணிவரை கடைகள் திறக்கப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறையினருக்கு முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.