ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகிறது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் 29ஆயிரத்து 941பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் ரோமேனியாவில் இதுவரை 10இலட்சத்து 75ஆயிரத்து 543பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 307பேர் பாதிக்கப்பட்டதோடு 56பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 12ஆயிரத்து 714பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 590பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து 10இலட்சத்து 32ஆயிரத்து 888பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.