ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் 50இலட்சத்து ஆயிரத்து 505பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் ரஷ்யாவில் இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 18ஆயிரத்து 482பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், எட்டாயிரத்து 951பேர் பாதிக்கப்பட்டதோடு 357பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 65ஆயிரத்து 261பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 46இலட்சத்து 17ஆயிரத்து 762பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.