இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 4 ஆயிரத்து 455 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 3 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நேற்று ஒரேநாளில் 2 இலட்சத்து 22 ஆயிரத்து 835 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 67 இலட்சத்து 51 ஆயிரத்தை கடந்துள்ளது.
இவர்களில் 2 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 27 இலட்சத்து 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் அவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.