வவுனியா மொத்த வியாபார சந்தை பகுதிகளில் இராணுவம் அல்லது விசேட அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்துங்கள் என சுகாதார பிரிவு, வவுனியா மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியிடம் கோரியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சுகாதார பிரிவினர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகளவு சந்தைகளின் ஊடாகவே பரவி வருகின்றது.
இந்நிலையில் வவுனியா மொத்த வியாபார சந்தை, சிறியதொரு இடத்திலேயே உள்ளது. ஆனாலும் மக்கள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகின்றது.
மேலும் இந்த பகுதியில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டாலும் அவர்களின் அறிவுரைகளை பொதுமக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருக்கின்றனர்.
ஆகவே இந்த சந்தை பகுதிக்கு, விசேட அதிரடிப்படையினர் அல்லது இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த வேண்டும்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.