நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 970 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 67ஆயிரத்து 171ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 296 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 903 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 210ஆகப் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், 36ஆயிரத்து 76 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 14 இலட்சத்து 54 ஆயிரத்து 485 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை மூன்று இலட்சத்து 33ஆயிரத்து 423பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது