சினோபோர்ம் மற்றும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சீனாவிலிருந்து 14 மில்லியன் டோஸ் சினோபோர்ம் தடுப்பூசியும், 1 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியையும் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டின் இறுதியில் மக்கள் தொகையில் 60% முதல் 70% பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக குறித்த கொள்வனவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீன அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட 5 இலட்சம் சினோபோர்ம் தடுப்பூசிகள் இன்று (செவ்வாய்கிழமை) இலங்கையை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.