பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப் 2026 போட்டிகள் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றன.
போட்டிகளின் நடுவர் குழாமில் இலங்கையர்களான தம்மிக்க ஆரியரத்ன , அன்ரோ டினேஷ் தேவசகாயம் ஆகியோர் கடமையாற்றியதோடு,போட்டியாளர்களை ஒழங்கமைக்கும் பணிக்குரிய குழுவில் மணிமாறன் சிவதாசன் கடமையாற்றினார்.
சுமார் 23நாடுகளின் தேசிய கராத்தே அணிகள் பங்குபற்றிய எலைட் மற்றும் 1700 போட்டியாளர்கள் பங்குபற்றிய கழக போட்டிகளில் இவர்கள் நடுவர்களாக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
















