நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி, களுத்துறை, கேகாலை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய ஆறு மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.