ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஆர்.டி.ஐ.எப் எனப்படும் ரஷ்ய நேரடி முதலீடு நிதியமும், பனேசியா பயோடேக் என்ற இந்திய நிறுவனமும் இணைந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்கவுள்ளன.
ஹிமாச்சல பிரதேசத்தின் பாத்தி பகுதியில் உள்ள பனேசியா பயோடெக் நிறுவுனத்தில் தயாரிக்கப்படும் முதற்கட்ட தடுப்பூசிகள், ரஷ்யாவின் கமலேயே ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.