மைதான் திரைப்படத்தை நினைத்தாலே எனக்கு மன அழுத்தம், வேதனைதான் வருகிறது என தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்காக கடந்த வருடத்தில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த செட் சேதமடையவே ஊரடங்கு தளர்த்தப்பட்டப்பின் மீண்டும் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஏற்பட்ட டாவ்தே புயலில் குறித்த செட் சேதமடைந்தது. இதனால் போனிகபூருக்கு மிகப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே தயாரிப்பாளர் போனி கபூர் மேற்படி அறிவித்துள்ளார்.