மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரம் இரவு 8:45 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஒரே ஒரு ரயில் கட்டுப்பாட்டாளருடன்சோதனை ஓட்டத்தில் சென்று கொண்டிருந்த ஒரு ரயில், பயணிகளை ஏற்றிச் செல்லும் மற்றொரு ரயிலில் மோதியது.
பிரசாரனா மலேசியா பெர்ஹாடடால்; இயக்கப்படும் இரு ரயில்களும் கம்புங் பாரு மற்றும் கே.எல்.சி.சி நிலையங்களுக்கு இடையில் ஒரு சுரங்கப்பாதையில் மோதியபோது மணிக்கு 40 கி.மீ (சுமார் 25 மைல்) வேகத்தில் பயணித்ததாக மாநில ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த விபத்தின் போது சுமார் 166பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகி கோலாலம்பூர் மருத்துவமனை உட்பட அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். நாற்பத்தேழு பயணிகள் பலத்த காயமடைந்தனர் என்று மாநில ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.
கடந்த 23 ஆண்டில் மலேசியாவில் மெட்ரோ ரெயிலில் மிகப்பெரிய விபத்து நிகழ்ந்திருப்பது இதுதான் முதல் தடவையாகும்.