ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் டோக்கியோவிலும் ஒசாகா போன்ற மாகாணங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொரோனா தடுப்பூசி மையங்களைத் தொடங்கி, நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான அளவு தடுப்பூசிகளை ஜப்பானிய இராணுவம் செலுத்தி வருகிறது.
இதில் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஜப்பானின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில், இதுவரை 5 சதவீதம் பேருக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் கொரோனா பரவலால், ஜப்பானின் சுகாதார உட்கட்டமைப்பின் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. சில மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் வென்டிலேட்டர் வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், இதுவரை ஏழு இலட்சத்து 18ஆயிரத்து 864பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 12ஆயிரத்து 312பேர் உயிரிழந்துள்ளனர்.