மத்தியில் ஆட்சி செய்பவர்கள் லட்ச தீவுகளை அழிக்க முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுற்றுலாவிற்கு பெயர்போன லட்சத்தீவுகளில் மத்திய அரசின் சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கைகள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் உரிமைகளை பறிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ லட்சத்தீவுகள் இந்தியக் கடலின் ஆபரணம். மத்தியில் ஆட்சியில் உள்ள அறிவற்றவர்கள் அதனை அழிக்க முயற்சிக்கின்றனர். நாம் லட்சத்தீவுளின் மக்களுடன் உடன் நிற்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.