இங்கிலாந்தில் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொள்ள 30 மற்றும் 31 வயதுடையவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பள்ளிவாசல்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் ரக்பி மைதானங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட 1,600 இடங்களில் ஒன்றில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் கிட்டத்தட்ட முதியவர்கள் முக்கால்வாசி பேருக்கு ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து முதியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் அளவை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பி .1.617.2 மாறுபாட்டை எதிர்கொள்ளவும் கொரோனாவிற்கு எதிரான வலுவான பாதுகாப்பிற்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது அவசியமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.