ஜோ’, ‘கோழிப்பண்னை செல்லதுரை’ திரைப்படங்கள் மூலம் பிரபலமான ஏகன், அடுத்து நடிக்கும் படம் ‘ஹைக்கூ’. இதை யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் அருளானந்து, மேத்யூ அருளானந்து தயாரிக்கின்றனர்.
தெலுங்கு நடிகை ஸ்ரீதேவி, மலையாள நடிகை ஃபெமினா ஜார்ஜ் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தின் முதல் தோற்றம் டிசம்பரில் வெளியானது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு இடுக்கியில் தொடங்கியுள்ளது.
இயக்குநர் ராம், கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். இந்நிலையில், படப்பிடிப்பு தொடங்கும் முன்பே இதன் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.
















