தவறுகளையும் முறைப்பாடுகளையும் தடுப்பதற்காக மட்டுமே சமூக வலைத்தளங்களுக்கு புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளாதாக மின்னனு மற்றும் தகவல் தொழிநுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரஷாத் தெரிவித்துள்ளார்.
புதிய விதிமுறைகளுக்கு எதிராக WhatsApp நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ‘தவறுகளையும், முறைக்கேடுகளையும் தடுப்பதற்காக மட்டுமே சமூக வலைதளங்களுக்கு புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் பாதிக்கப்படும் அல்லது சாதாரண சமூக வலைத்தள பயனாளர்களுக்கு சாதகமானதாகவே இருக்கும். தனிமனித உரிமைகளான தனிப்பட்ட தரவுகளுக்கு அரசு மரியாதையையும் அங்கீகாரத்தையும் அளிக்கிறது.
WhatsApp ஐ பயன்படுத்தும் சாதாரண மக்கள் இந்த விதிமுறைகளால் அச்சமடைய வேண்டாம். விதிகளுக்கு புறம்பாகவும், அரசமைப்பு, சட்டம் – ஒழுங்கு நாட்டின் இறையாண்மை போன்றவற்றிற்கு எதிரான வதந்திகளை முதலில் யார் உருவாக்குவது போன்ற தரவுகளுக்காக மட்டுமே புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.