பிரித்தானியாவில் உள்ள கொவிட் தொற்றுகளில் முக்கால்வாசி வரை அதாவது 75 சதவீதம் இந்திய மாறுபாடாக இருக்கலாம் என்று சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்திலிருந்து இந்த மாறுபாட்டின் தொற்றுகள் 3,535 அதிகரித்து 6,959ஆக உயர்ந்துள்ளதாக இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து டவுனிங் வீதி ஊடாக சந்திப்பில் கருத்து தெரிவித்த சுகாதார செயலாளர் மாற் ஹான்காக்,
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தொற்றுகள் உயரும் என்று அரசாங்கம் எப்போதும் எதிர்பார்த்திருந்தது. ஆனால், தொற்றுகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைக் கண்காணிப்பது மிகவும் முக்கியமானதாகும்’ என கூறினார்.
நேற்று (வியாழக்கிழமை) இங்கிலாந்தில் மேலும் 3,542 கொரோனா வைரஸ் தொற்றுகளும், 28 நாட்களுக்குள் 10 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
புதிய கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 3,000க்கு மேல் உயருவது இது தொடர்ந்து இரண்டாவது நாளாகும். ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து முதல் முறையாக நோய்த்தொற்றுகள் இந்த நிலையை எட்டியுள்ளன.