ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் எல்லை வரையறையையும் உலக நாடுகள் மதித்து நடக்க வேண்டும் என, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ஐ.நா வழிகாட்டலின்படி அமைக்கப்பட்ட ஒரே சர்வதேச சட்டம்தான் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பும் அனைத்து நாடுகளையும் சமமாக மதித்து அவற்றின் எல்லை வரையறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இந்த கூட்டத்தில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யீ உள்ளிட்டோர் காணொலி ஊடக கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.