ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும் என தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ளது. அதேபோல் மே மாத இறுதியில் உத்திரகண்ட் மாநிலத்தில் ஆட்சிக்காலமும் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பதில் அளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ‘ஐந்து மாநிலங்களின் தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும். சட்டசபையின் ஆயுடன்காலம் முடிவதற்குள் தேர்தல் நடத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.
ஏற்கனவே கொரோனா பரவலுக்கு மத்தியில் பீஹார் மாநில தேர்தலை நடத்திய அனுபவம் உள்ளது. அதனை பின்பற்றி சமீபத்தில் தமிழகம், அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தலை நடத்தினோம்.
அதனால் அடுத்த ஆண்டு திட்டமிட்டப்படி ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறும்’ எனத் தெரிவித்துள்ளார்.