போர்னியோ கடற்கரையிலிருந்து 16 சீன விமானங்களை அதன் வான்வெளியில் ஊடுருவியதை அடுத்து சீன தூதுவருக்கு மலேசியா அழைப்பு விடுத்துள்ளது.
மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் விமானங்கள், மலேசிய விமானப்படையால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்காணிக்கப்பட்டன.
இந்நிலையில் மலேசிய வான்வெளி மற்றும் நாட்டின் இறையாண்மையை மீறுவது குறித்து விளக்கமளிக்க மலேசியாவின் வெளிவிவகார அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் சீனாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் எந்தவொரு நாடுகளுடனும் நட்பான இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருப்பது நமது தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்வோம் என்று அர்த்தமல்ல என்றும் இதுவே மலேசியாவின் நிலைப்பாடு என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.