வரலாற்று பிரசித்திபெற்ற வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவிற்கு 15 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புளியங்குளம் புதூர் நாகரம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் ஏழாம் திகதி இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வினை நடாத்துவது தொடர்பாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று(புதன்கிழமை) விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது கொரோனா வைரஸ் பரவலைக்கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் குறித்த நிகழ்வினை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விசேட பூஜைகள் மற்றும் கிரியைகளை முன்னெடுக்கும் 15 பேருக்கு மாத்திரம் பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர், புதூர் ஆலய நிர்வாகத்தினர், வவுனியா வடக்கு சுகாதாரவைத்திய அதிகாரி, மற்றும் பொலிஸார் கலந்துகொண்டனர்.