• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
யாழில் அண்மைய நாட்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்!

பயணக்கட்டுப்பாட்டுக்குள்ளும் கந்தரோடையில் நகைகள் கொள்ளை – மூவர் கைது!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/06/03
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
75 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பயணக்கட்டுப்பாட்டில் யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்கும் நிலையில் கந்தரோடைப் பகுதியில் பெரும் நகைக் கொள்ளை இடம்பெற்றுள்ளமை மக்களை பயப்பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 03.30 மணியளவில் கந்தரோடையில் இடம்பெற்றுள்ளது.

கோடாரி, கத்திகளுடன் முகங்களைத் துணிகளால் முழுமையாக மறைத்தவாறு வீடொன்றுக்குள் உள்நுழைந்த திருடர்கள் குழு வீட்டில் உறக்கத்திலிருந்தவர்களைக் கடுமையாகத் தாக்கியும், அச்சுறுத்தியும் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கந்தரோடை மேற்கு சங்காவத்தை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

குறித்த வீட்டு உரிமையாளரான வயோதிபப் பெண்மணியின் மகனின் முதலாவது ஆண்டுத் திவசம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் வேலைகள் செய்த அசதியில் வீட்டிலிருந்த அனைவரும் உறங்கியுள்ளனர்.

தற்செயலாக வீட்டின் ஒரு கதவு ஒரு லொக் மட்டும் போட்டுப் பூட்டியிருந்த நிலையில் குறித்த கதவினைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் நேராக அறைக்குள் சென்று அங்கு உறங்கிக் கொண்டிருந்த கணவனையும், மனைவியையும் தட்டி எழுப்பியுள்ளனர்.

பின்னர், அவர்களை அங்கிருந்து எழும்பக் கூடாது எனக் கணவனைக் கோடாரியாலும், தென்னை மட்டையாலும் தாக்கியுள்ளதுடன் அவரது மனைவியையும் தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் மனைவி ஐயோ… ஐயோ… என அவலக் குரல் எழுப்பவே வீட்டின் விறந்தையில்; உறங்கிக் கொண்டிருந்த வயோதிபப் பெண்மணி தனது மகளிடம் என்னம்மா எனக் கேட்டுள்ளார்.

இதனையடுத்துக் குறித்த வயோதிபப் பெண்ணின் குரல் வந்த திசை நோக்கி ஓடிச் சென்ற திருடர்கள் அவரையும் தாக்கி அச்சுறுத்தியதுடன் மகளின் கையில் கத்தியால் வெட்டியுள்ளனர்.

மகள் அணிந்திருந்த மூன்று பவுண் பெறுமதியான தங்கச் சங்கிலியைக் கழுத்தைத் திருகி இழுத்த அறுத்த திருடர்கள் அணிந்திருந்த ஒன்றரைப் பவுண் பெறுமதியான கைச்சங்கிலி, இரண்டு மோதிரம், காப்புகள்   என்பவற்றையும் பறித்தெடுத்தனர். இதனால், குறித்த பெண்ணின் கழுத்தில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டன.

அத்துடன் குறித்த வயோதிபப் பெண்மணியின் மூத்த மகளையும் கடுமையாகத் தாக்கி அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், காப்புகள் என்பவற்றையும் திருடிச் சென்றுள்ளனர். தாக்குதல் காரணமாக மேற்படி பெண்ணின் கையிலும் காயங்கள் காணப்படுகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் அவசரத் தொலைபேசி இலக்கம் அழைப்பு ஊடாகச் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்துச் சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணைகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில் குறித்த வீட்டிலிருந்து உடனடியாக யாருக்கும் தகவல் செல்லக் கூடாது என்பதற்காக அங்கிருந்த இரண்டு கைத் தொலைபேசிகளையும் திருடர்கள் திருடிச் சென்று பக்கத்து வளவுக்குள் போட்டுச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில் கைத்தொலைபேசிகளில் பதித்திருந்த அடையாளங்களுக்கு அமைய பொலிஸாரின் மோப்ப நாயின் உதவியுடன் குறித்த வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள பகுதியில் சந்தேகத்தின் பேரில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

blank

blank

Related

Tags: கந்தரோடைநகைக் கொள்ளை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரான்ஸில் ஜுன் 15ஆம் திகதி முதல் பதின்மவயதினர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள்!

Next Post

இலங்கையில் 18 இலட்சத்து  34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது

Related Posts

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்
இலங்கை

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு
யாழ்ப்பாணம்

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
ஹோட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

2026-01-28
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரம்!

2026-01-28
சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி
இலங்கை

சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி

2026-01-28
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு
உலகம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு

2026-01-28
Next Post
தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

இலங்கையில் 18 இலட்சத்து  34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது

கொவிட்-19 தடுப்பூசிகளைக் கலந்து செலுத்திக்கொள்ள முடியும்: கனேடிய மருத்துவர்கள்!

கொவிட்-19 தடுப்பூசிகளைக் கலந்து செலுத்திக்கொள்ள முடியும்: கனேடிய மருத்துவர்கள்!

ஐம்பதாயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டது மாகாணத்துக்கா? மாவட்டத்துக்கா? – வினோ கேள்வி

ஐம்பதாயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டது மாகாணத்துக்கா? மாவட்டத்துக்கா? - வினோ கேள்வி

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

0
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

0
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

0
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

0
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

0
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

2026-01-28
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

2026-01-28

Recent News

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

2026-01-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.