கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களு கங்கை மற்றும் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதன் காரணமாக இவ்வாறு சிறிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கம்பஹா, மினுவங்கொடை, ஜா-எல, மில்லனிய, களுத்துறை, ஹொரணை, இங்கிரிய மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளில் சிறிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் 150 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யும் என்றும், சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் நாட்டில் நிலவும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.